முற்பதிவின் அடிப்படையில் வாரத்தில் 3 நாட்கள் இந்திய வீசா சேவை

இந்திய வீசா விண்ணப்ப முகவர் நிலையமான IVS, வாரத்தில் 3 நாட்கள் மாத்திரமே வீசா விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளுமென, இந்திய உயர் ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.

இந்திய உயர் ஸ்தானிகராலயம் விடுத்துள்ள அறிவித்தலிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய எதிர்வரும் திங்கட்கிழமை, ஜூலை 04 ஆம் திகதி முதல் செவ்வாய்க்கிழமை, வியாழக்கிழமை, வெள்ளிக்கிழமை ஆகிய நாட்களில் மாத்திரம் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஜூலை 04ஆம் திகதி திங்கட்கிழமையும் எந்த விதமான முன்பதிவுகளும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என்பது குறிப்பிடத்தக்கவிடயமாகும்.

குறித்த தினங்கள் உயர் ஸ்தானிகராலயத்தினால் அறிவிக்கப்பட்டிருக்கும் விடுமுறை நாட்களாக இருந்தால் அத்தினங்களிலும் எதுவிதமான சேவைகளும் இடம்பெறமாட்டாது.

சகல வீசா விண்ணப்பதாரிகளும் முற்கூட்டியே பதிவுகளை மேற்கொள்ளும்படி வேண்டப்படுவதுடன் மறு அறிவித்தல் வரையில் வீசா விண்ணப்பங்களை மேலே கூறப்பட்ட தினங்களில் மாத்திரம் IVS நிலையத்தில் சமர்ப்பிக்குமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய சூழ்நிலையினை கவனத்தில்கொண்டு, வீசா சேவையினை பெற்றுக்கொள்ளும் இலங்கை மற்றும் ஏனைய நாடுகளைச் சேர்ந்த பிரஜைகளின் சௌகரியங்களுக்கு முக்கியத்துவமளித்து, தமது பணியாளர்களின் போக்குவரத்து தொடர்பிலும் கவனத்தில் கொண்டு குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக, உயர் ஸ்தானிகராலயம் சுட்டிக்காட்டியுள்ளது.

இது தொடர்பான முற்பதிவுகளை மேற்கொள்ள >>> www.ivsvisalanka.com/VisaAppointments


Add new comment

Or log in with...