அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் மனைவி மற்றும் மகள் ரஷ்யாவுக்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவுக்கு எதிரான அமெரிக்காவின் தடைகள் விரிவுபடுத்தப்பட்டதற்கு பதில் நடவடிக்கையாக இந்த தடை கொண்டுவரப்பட்டுள்ளது.
இவ்வாறு தடைசெய்யப்படும் 25 அமெரிக்கர்களின் பெயர் பட்டியலை ரஷ்யா வெளியுறவு அமைச்சு வெளியிட்டுள்ளது. இதில் நான்கு செனட் உறுப்பினர்களின் பெயர்களும் அடங்கும். இவர்கள் ரஷ்யாவுக்கு எதிரான பிரசாரங்களைச் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
தவிர பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், ஆய்வாளர்கள் மற்றும் அமெரிக்க அரசின் முன்னாள் அதிகாரிகளுக்கும் ரஷ்யாவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Add new comment