4 மாதங்களுக்கு அவசியமான 100,000 மெ.தொ. எரிவாயு கொள்வனவுக்கு உடன்படிக்கை

- 90 மில். டொலரில் 70 மில். டொலர் உலக வங்கியிடமிருந்து

நாட்டின் 4 மாதங்களுக்கு அவசியமான ஒரு இலட்சம் (100,000) மெட்ரிக் தொன் எரிவாயுவை கொள்வனவு செய்வதற்கு இன்று (30) ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக, பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

நிதி அமைச்சகத்தின் கீழ் உள்ள லிட்ரோ கேஸ் நிறுவனத்தினால் இவ்வொப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

குறித்த 100,000 மெட்ரிக் தொன் எரிவாயுவிற்கு 90 மில்லியன் அமெரிக்க டொலர் செலவாகும் என்பதுடன், இதற்கு உலக வங்கியிடமிருந்து 70 மில்லியன் டொலர் வழங்கப்படவுள்ளதுடன்,

மீதமுள்ள 20 மில்லியன் டொலர்களை லிட்ரோ நிறுவனம் வழங்கவுள்ளது.

இந்த எரிவாயு கையிருப்பை 4 மாதங்களுக்கு நாட்டில் விநியோகிக்க முடியுமாக இருக்கும் என்பதுடன், இதில் 70% ஆனவை வீட்டுப் பாவனைக்கு வழங்கப்படவுள்ளது.

இதில் 5 மில்லியன் 12.5 கி.கி. சிலிண்டர்களும், 1 மில்லியன் 5 கி.கி. சிலிண்டர்களும், 1 மில்லியன் 2.5 கி.கி. சிலிண்டர்களுமென பெறப்படவுள்ளது.

மீதமுள்ள 30% எரிவாயு நாட்டின் வர்த்தகப் பயன்பாட்டிற்கு வழங்கப்படவுள்ளது.

இதேவேளை. 20 மில்லியன் டொலர் செலவில் லிட்ரோ நிறுவனத்தால் கொள்வனவு செய்யப்படும் 33,000 தொன் எரிவாயு தொகையின், ஆரம்ப தொகை எதிர்வரும் வாரத்தில் இலங்கையை வந்தடையவுள்ளதோடு, அவை கிடைத்தவுடன் உடனடியாக விநியோகம் ஆரம்பிக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.


Add new comment

Or log in with...