அரசியலமைப்புக்கான 22ஆம் திருத்தம்; வர்த்தமானி வெளியீடு

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் அரசியலமைப்பை திருத்துவது தொடர்பான சட்டமூலம் உள்ளடங்கிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

நேற்றைய திகதியில் (29) வெளியிடப்பட்டுள்ள, அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலம்,  நீதி, சிறைச்சாலை அலுவல்கள் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவினால் வெளியிடப்பட்டுள்ளது.

இருபத்திரண்டாவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பான அடிப்படைச் சட்டமூலத்திற்கு கடந்த ஜூன் 20ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கொள்கை ரீதியான அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்தது.

அதற்கமைய, சட்டவரைஞரால் இருபத்திரண்டாவது அரசியலமைப்பு திருத்தம் தயாரிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த சட்டமூலம் அரசியலமைப்புக்கு எதிரானது அல்ல என்பது சட்டமா அதிபரால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதற்கமைய, இருபத்திரண்டாவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளியிடுவதற்கும் பின்னர் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்கும் நீதி, சிறைச்சாலைகள் விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் இவ்வாரம் (28) சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

PDF File: 

Add new comment

Or log in with...