'என் இனிய பட்டாம் பூச்சிக்கு' கவிதை நூல் வெளியீட்டு விழா

பௌர்ணமி கலை இலக்கிய நிகழ்வுத் தொடரின் 43ஆவது நிகழ்வாக மகுடம் கலை இலக்கிய வட்டம் நடாத்தும் வி. மைக்கல் கொலினின் 'என் இனிய பட்டாம் பூச்சிக்கு' கவிதைத் தொகுப்பு வெளியீட்டு விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை 4.00மணிக்கு மட்டக்களப்பு பொது   நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.  

மட்டக்களப்பு தமிழ்ச் சங்கத்தின் தலைவர் வி.ரஞ்சிதமூர்த்தியின் தலைமையில் நடைபெற்ற குறித்த நிகழ்விற்கு யாழ். மாவட்ட செயலாளர் க.மகேசன், கிழக்கு பல்கலைக்கழக வேந்தர் போராசிரியர் எம்.செல்வராசா மற்றும் கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் வ.கனகசிங்கம் ஆகியோர் பிரதம விருந்தினர்களாக கலந்துகொண்டு விழாவை சிறப்பித்திருந்தனர். 

மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நிகழ்வில் நூலின் முதற் பிரதியை மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி குணசிங்கம் சுகுணன் பெற்றுக் கொண்டார். 

குறித்த நூல் தொடர்பான நயவுரையினை கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவக சிரேஷ்ட விரிவுரையாளர் க.மோகனதாசன் ஆற்றியதுடன், 

வெளியீட்டுரையை எழுத்தாளர் ச.மணிசேகரனும், வரவேற்புரையை மட்டக்களப்பு மாவட்ட தமிழ் எழுத்தாளர் சங்க பொருளாளர் கதிரவன் த.இன்பராசாவும், நன்றியுரையை மகுடம் வி.மைக்கல் கொலினும் நிகழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

இந் நூல் வெளியீட்டு நிகழ்வில் தினகரன் ஆசிரிய பீடத்தைச் சேர்ந்த லோரன்ஸ் செல்வநாயகம் உள்ளிட்ட மேலும் பலருக்கு நூலின் முதற் பிரதிகள் வழங்கி வைக்கப்பட்டன.  

கல்லடி குறூப் நிருபர் 

 


Add new comment

Or log in with...