சாய்ந்தமருது கிரிக்கெட் சங்க ஐ.எல். உதுமான் கண்டு ஞாபகார்த்த கிண்ணம் ஆரம்பம்

சாய்ந்தமருது கிரிக்கெட் சங்கத்தின் 2வது ஆண்டு பூர்த்தியை சிறப்பிக்கும் வகையில் சம்மாந்துறை நாபீர் பவுண்டேசன் ஸ்தாபகரும் சமுக சேவையாளரும், பொறியியலாளருமான யூ.கே. நாபீரின் அனுசரணையுடன் அவரது தந்தை ஐ.எல். உதுமான்கண்டு ஞாபகார்த்த கடினபந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் அங்குரார்பண நிகழ்வு சனிக்கிழமை (25) சாய்ந்தமருது கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் எம்.எம்.நிஜாமுடீன் தலைமையில் இடம்பெற்றது.

இச்சுற்றுப் போட்டியிக்கு முழு அனுசரணை வழங்கிக் கொண்டிருக்கும் சமூக சேவையாளர் யூ.கே. நாபீரின் சகோதரர் யூ.கே.ஸரூக் பிரதம அதிதியாக கலந்து கொண்டு இப்போட்டியை மிக கோலாகலமாக சாய்ந்தமருது அஷ்ரப் ஐக்கிய மைதானத்தில் ஆரம்பித்து வைத்தார்.

இதில் முதலாம் நாளுக்கான காலை நேர போட்டியாக சாய்ந்தமருது சன்புலவர் வி.கழகம் மற்றும் சாய்ந்தமருது பவுஸி வி.கழகத்தினர் பலப்பரீட்சை நடத்தினர். அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற மாலை நேரம் போட்டியில் சாய்ந்தமருது நியு ஸ்டார் மற்றும் மெவ்ரிக் ஆகிய அணிகள் பங்கேற்றன.

சாய்ந்தமருது விசேட நிருபர்


Add new comment

Or log in with...