பங்களாதேஷுக்கு இந்தியா வாழ்த்து

பத்மா பாலம் வெற்றிகரமாக பூர்த்தி செய்யப்பட்டதற்கு பங்களாதேஷுக்கு இந்தியா வாழ்த்துகளை தெரிவித்துள்ளது.

மிகப்பெரிய நதியான பத்மா நதிக்கு மேலால் போடப்பட்டிருக்கும் இந்தப் பாலம் 6.15 கி.மீ நீண்டதாகும். இதனை பங்களாதேஷ் பிரதமர் ஷெய்க் ஹசீனா கடந்த சனிக்கிழமை திறந்துவைத்தார்.

“பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தத் திட்டம் பூர்த்தி செய்யப்பட்டிருப்பது பிரதமர் ஷெய்க் ஹசீனாவின் துணிச்சலான் முடிவு மற்றும் தொலைநோக்கு பார்வை கொண்ட தலைமையை காண்பிப்பதாக உள்ளது” என்று பங்களாதேஷுக்கான இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.


Add new comment

Or log in with...