நூற்றாண்டில் முதல் முறை கடனை செலுத்த தவறிய நாடானது ரஷ்யா

ரஷ்யா கடந்த நூற்றாண்டில் முதல் முறையாக வெளிநாட்டு நாணய இறைமை பத்திர கடனை செலுத்தத் தவறியுள்ளது.

கடந்த மே 27 ஆம் திகதி செலுத்த வேண்டி இருந்த சுமார் 100 மில்லியன் டொலர் இரு பிணைக் கட்டணங்கள் மீதான 30 நாள் சலுகைக் காலம் கடந்த ஞாயிற்றுக்கிழமையுடன் முடிவுக்கு வந்துள்ளது.

இந்தக் காலக்கெடு தவறவிடப்பட்டால் கடனை செலுத்தத் தவறியதாகக் கருதப்படும் என்று புலும்பேர்க் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

கடந்த பெப்ரவரி 24 ஆம் திகதி உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்தது தொடக்கம் அந்நாட்டின் மீது தடைகள் விதிக்கப்பட்டிருக்கும் நிலையில், நிலுவையில் உள்ள 40 பில்லியன் டொலர் கடன் பத்திரங்களை செலுத்துவதற்கு ரஷ்யா போராடி வருகிறது.

கடைசியாக 1918 ஆம் ஆண்டே ரஷ்யாவுக்கு இவ்வாறான நிலை ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...