சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முயன்ற 54 பேர் கைது

மட்டு. பாலமீன்மடு கடற்பகுதியில் கடற்படை அதிரடி

சட்டவிரோதமாக 54பேரை அவுஸ்திரேலியாவுக்கு ஏற்றிச்சென்ற படகொன்றை இலங்கை கடற்படையினர் கிழக்கு கடற்பரப்பில் வைத்து கைப்பற்றியுள்ளனர்.  

அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக செல்ல முற்பட்ட 54பேரும் மட்டக்களப்பு - பாலமீன்மடு கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.  

கடற்படையினர் முன்னெடுத்த சுற்றிவளைப்பின்போதே குறித்த 54பேரும் ​நேற்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.  

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களை திருகோணமலை - துறைமுகத்திற்கு அழைத்துவருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்தனர்.  

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அண்மைக்காலமாக சட்டவிரோதமாக நாட்டை விட்டு இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு தப்பிச் செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. கடந்த 6மாத காலத்தில் 400பேர் வரை அவுஸ்திரேலியா செல்ல முற்பட்டதாக அறிய வருகிறது.

 


Add new comment

Or log in with...