இயேசுவின் திரு இருதய பெருவிழா

கத்தோலிக்கத் திருச்சபை கடந்த வாரம் நம் ஆண்டவர் இயேசுவின் திரு இருதய திருவிழாவைக் கொண்டாடியது.

ஜூன் மாதம் முழுவதும் திரு இருதயத்திற்கு அர்ப்பணிக்கப்பட்ட மாதமாக திகழ்வதுடன் விசேடமான வழிபாடுகள்   திருப்பலிகளும் நடைபெற்று வருகின்றன.

1856ம் ஆண்டில்  பிரான்ஸ் நாட்டு ஆயர்கள்  திருத்தந்தை  9ம் பயஸ்  அவர்களைக் கேட்டுக்கொண்டதன் பேரில், அத் திருத்தந்தை, இயேசுவின்  தூய்மைமிகு  இதயம் பெருவிழாவை  உருவாக்கினார்.

அத்திருத்தந்தையின்  அறிவுரையின்படி அப் பெருவிழா  கத்தோலிக்கத் திருஅவை  முழுவதும் நவம்பர்    20ஆம் திகதி கொண்டாடப்பட்டது. .

பின்னர், இயேசுவின் தூய்மை மிகு இதயம்  புனிதர்   மார்கிரேட்மரி  அலக்கோக்  அவர் களுக்கு  திருக்காட்சியில் கூறியபடி  இயேசுவின் திருவுடல், திருஇரத்தப் பெருவிழாவைத் தொடர்ந்துவரும் வெள்ளிக்கிழமையன்று  இப்பெருவிழா சிறப்பிக்கப்பட்டு வருகிறது.

இயேசுவின்  தூய்மைமிகு  இதயம் போன்றதோர்   எல்லையில்லா  இரக்கம் இன்றைய நம் உலகிற்குத் தேவைப்படுகிறது  என  திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஜூன் 24வெள்ளியன்று சிறப்பிக்கப்பட்ட இயேசுவின்  தூய்மைமிகு  இதயம் பெருவிழாவை மையப்படுத்திய  செய்தியில்   குறிப்பிட்டுள்ளார்.

தூய்மைமிகு  இதயம் என திருத்தந்தை வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், மனித வாழ்வில் நாம் பார்க்கின்ற அளவில்லாத்  தீமைகள் மற்றும் துன்பங்களை அகற்றுவதற்கு  இயேசுவின்  தூய்மைமிகு இதயத்திடம் இருக்கின்ற வரம்பில்லா  இரக்கம் போன்றதோர்   இரக்கம் தேவைப்படுகிறது, எனவே நம்மையும்  உலகத்தையும் அவ் விதயத்திடம் அர்ப்பணிப்போம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

 

                                


Add new comment

Or log in with...