எரிபொருளுக்காக ரஷ்யா சென்றார் கல்வி அமைச்சர்

- கலாநிதி சமன் வீரசிங்கவும் உடன் பயணம்

ரஷ்யாவிடம் இருந்து எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கான பேச்சுவார்த்தையில் கலாநிதி சமன் வீரசிங்க மற்றும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த ஆகியோர் இலங்கை சார்பில் கலந்துகொள்ளவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எரிசக்தி அமைச்சில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜயசேகர இரு இலங்கைப் பிரதிநிதிகள் இன்று ரஷ்யா செல்லவுள்ளதாக தெரிவித்தார்.

இந்த நிலையிலேயே, இலங்கைக்கான முன்னாள் ரஷ்ய தூதுவராக இருந்த கலாநிதி சமன் வீரசிங்க மற்றும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த ஆகியோர் ரஷ்யா செல்லவுள்ளதாக கூறப்படுகிறது.

அத்தோடு ஈரான் மற்றும் கட்டார் ஆகிய நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அமைச்சர் கஞ்சன விஜேசேகர மற்றும் அமைச்சர் நசீர் அஹமட் ஆகியோர் பயணமாகுவதாக அமைச்சு தகவல்கள் தெரிவித்தன.


Add new comment

Or log in with...