எரிபொருளுக்கு ‘டோக்கன்’ வழங்கும் நடவடிக்கை நேற்று ஆரம்பம்

எரிபொருள் நெருக்கடி அதிகரித்ததையடுத்து, நிலைமையை கட்டுப்படுத்த நேற்று (27) முதல் ‘டோக்கன்’ முறையின் கீழ் எரிபொருள் விநியோகிக்கும் நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளது.

படையினர் மற்றும் பொலிஸாரின் பங்களிப்புடன் நாடு தழுவிய நேற்று (27) காலை முதல் இதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்றன.

இதன்படி பல எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும், எரிபொருள் பெறுவதற்காக வந்திருந்தவர்களுக்கு ‘டோக்கன்’ வழங்கப்பட்டது. இதற்கு மேலதிகமாக குறிப்பு புத்தகமொன்றும் வழங்கப்பட்டு அதில் பெயர், விலாசம், தொலைபேசி இலக்கம் என்பன அதன்மூலம் சேகரிக்கப்படுகின்றன.

ஒரு வாகனம் ஒரே நாளில் பல தடவைகள் எரிபொருளை பெறுவதை தடுத்தல், வரிசைகளை குறைத்தல் உள்ளிட்டவையே இந்த நடவடிக்கையின் பிரதான நோக்கமென அறிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு கிழக்கிலும் டோக்கன்

விநியோகிக்கப்பட்டதோடு தெற்கில் டோக்கன் விநியோகம் குறைவாகவே மேற்கொள்ளப்பட்டதாக அறிய வருகிறது. டோக்கன் விநியோகித்த போதும் எரிபொருள் கப்பல்கள் வராமையில் எரிபொருள் விநியோகம் தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ளது.


Add new comment

Or log in with...