சர்வதேச நாணய நிதியத்துடனான உறவை வலுப்படுத்த அனைத்து மட்டங்களிலும் உதவி

- இலங்கைக்கு முடிந்தவரை உதவுமாறு அமெரிக்க ஜனாதிபதி பணிப்பு
- மருந்துகள், அத்தியாவசியப் பொருட்களைக் கொள்முதல் செய்வதில் சர்வதேச வங்கிகளிடம் கோரிக்கை
- பேச்சு சுதந்திரத்திற்கான சுதந்திரம் தொடர்பில் மகிழ்ச்சி

சர்வதேச நாணய நிதியத்துடனான உறவை அனைத்து மட்டங்களிலும் வலுப்படுத்துவதற்கு தொடர்ந்து ஆதரவளிப்பதாக இலங்கை வந்துள்ள அமெரிக்க உயர்மட்ட தூதுக்குழுவினர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவிடம் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க இராஜாங்க திணைக்களம் மற்றும் திறைசேரி பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று (27) காலை கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது.

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள தூதுக்குழுவினரை ஜனாதிபதி ராஜபக்‌ஷ பாராட்டியதுடன், நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடி, சமூக நெருக்கடி மற்றும் சர்வதேச நாணய நிதியத்துடன் நடைபெற்று வரும் கலந்துரையாடல்களின் முன்னேற்றம் குறித்தும் அவர்களுக்கு விளக்கமளித்தார்.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இலங்கையின் எதிர்காலத்தில் மிகுந்த அக்கறை கொண்டுள்ளார்.

தற்போதைய நெருக்கடி நிலையில் இலங்கையுடன் இணைந்து பயணிக்கவும் தேவையான உச்ச அளவு ஒத்துழைப்பை வழங்குமாறும் அமெரிக்க ஜனாதிபதி ஆலோசனை வழங்கியதாக அமெரிக்க வெளியுறவுத்துறையின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான பிரதி வெளியுறவுத்துறை செயலர் மற்றும் அமெரிக்க திறைசேரி ஆசிய வலய பிரதி செயலாளர் ராபர்ட் கப்ரோத் ஆகியோர் தெரிவித்தனர்.

சர்வதேச நாணய நிதியத்துடனான திட்டங்களை அமுல்படுத்துவதோடு நெருக்கடியில் உள்ள குடும்பங்களுக்கு நிவாரணம் கிடைக்கவும் இது எதிர்காலத்தில் தொடர்ந்து சாதகமான நிலைமையை ஏற்படுத்தும் என தூதுக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

நாட்டில் இடம்பெற்று வரும் பொருளாதார சீர்திருத்த செயற்பாடுகள் தொடர்பில் ஜனாதிபதியின் புரிந்துணர்விற்கும் அவரின் புரிதலுக்கும் உள்ள ஒற்றுமைகள் குறித்து தாங்கள் மகிழ்ச்சியடைவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஜனநாயக ரீதியிலான பேச்சுக்கு இடையூறு இல்லாமல் எவருக்கும் தமது கருத்துக்களை தெரிவிக்க சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளமை குறித்து பிரதிநிதிகள் குழுவினர் ஜனாதிபதிக்கு பாராட்டு தெரிவித்தனர்.

மருந்துகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களைப் பெறுவதற்கு கடன் கடிதங்களை வழங்குவதற்கு இலங்கைக்கு உதவுவதற்கு சர்வதேச வங்கிகளின் உதவியை நாடவுள்ளதாக பிரதிநிதிகள் குழுவினர் தெரிவித்தனர்.

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜோன் மெக்டானியல், தலைமை அதிகாரி ஜெஃப் சானின் மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத், ஜனாதிபதியின் பிரதம ஆலோசகர் லலித் வீரதுங்க மற்றும் ஜனாதிபதி செயலக பிரதானி அநுர திஸாநாயக்க ஆகியோரும் கலந்துகொண்டனர்.


Add new comment

Or log in with...