இஸ்ரேலில் உள்ள நெகேவ் பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் ஆரம்பக் கால பள்ளிவாசல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது அப்பகுதி மக்கள் கிறிஸ்தவ மதத்தில் இருந்து இஸ்லாம் மதத்திற்கு மாறியிருப்பதை வெளிச்சம்போட்டுக் காட்டும் வகையில் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.
பெடோயின் அரபு பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கும் ரஹாட் நகரத்தில் நெகேவ் பாலைவனம் அமைந்துள்ளது.
மாக்காவின் திசையை பார்த்த வகையில் அரைவட்ட சுவருடன் சதுர அறை மற்றும் சுவர்களை கொண்டதாக இந்த பள்ளிவாசல் காணப்படுகிறது.
இந்த பள்ளிவாசல் 1,200 ஆண்டுகளுக்கு மேல் பழைமையானது என்று நம்பப்படுகிறது. கட்டட நிர்மாணப் பணி ஒன்றின்போது பள்ளிவாசல் இடிபாடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
ஏழாம் நூற்றாண்டின் முதல் பாதியில் முஸ்லிம்கள் இந்தப் பகுதியை கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.
Add new comment