சோற்றுப் பார்சல், கொத்து உள்ளிட்ட உணவக தயாரிப்புகள் 10% விலை அதிகரிப்பு!

உணவகங்களில் தயாரிக்கப்படும் அனைத்து வகையான உணவுப் பொருட்களின் விலைகளையும் 10% ஆல் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக, அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

எரிபொருள் விலையேற்றத்தைத் தொடர்ந்து அரிசி உள்ளிட்ட ஏனைய அனைத்து மூலப் பொருட்களின் விலைகள் மற்றும் போக்குவரத்துக்கான செலவுகளை கருத்திற்கொண்டு இத்தீர்மானத்தை எடுத்துள்ளதாக அச்சங்கம் அறிவித்துள்ளது.

அதற்கமைய, சோற்றுப் பார்சல், கொத்து உள்ளிட்ட உணவகங்களில் தயாரிக்கப்படும் உணவுகளின் விலைகளை 10% இனால் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பேக்கரி உற்பத்திகளின் விலைகள் தொடர்பில் இன்றையதினம் (26) முடிவெடுக்கப்படுமென, பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...