மக்கள் மனம் கவர்ந்த வசந்தம் ரி.வி நாளை 13ஆவது அகவையில் காலடி

எஸ். கோணேஸ்வரராஜா (வசந்தம் ரி.வி. முகாமையாளர்)

வாழ்வின் வசந்தமாய் இலங்கை மக்களுக்கு தனது அர்ப்பணிப்பான சேவையை ஆற்றி, தொலைக்காட்சி வரலாற்றில் தனக்கென தனி இடத்தைப்பிடித்து இன்று வரைக்கும் மக்கள் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்திருக்கும் வசந்தம் தொலைக்காட்சி நாளை (25.06.2022) தன்னுடைய 13வது அகவையில் கால் பதிக்கிறது.

ஒரு தசாப்தத்தைக் கடந்து இலங்கை மக்களுடைய வாழ்க்கையிலும் அவர்களுடைய செயற்பாட்டிலும் முற்றுமுழுதாக தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ள தொலைக்காட்சியாக வசந்தம் தொலைக்காட்சி காணப்படுகிறது.

கடந்த காலத்தில் இலங்கையில் நிலவிய அசாதாரண வேளைகளிலும் கூட தொடர்ச்சியாக மக்களோடு மக்களாக நின்று அவர்களுடைய தேவைகளை, குறைநிறைகளை அறிந்து முடிந்த அளவுக்கு சமூக சேவை செய்த தொலைக்காட்சியாக பரிணமித்த வரலாற்றை இலங்கை மக்கள் நன்கறிவர். 2022 ஆம் ஆண்டு பிறந்தது முதற்கொண்டு இன்றுவரை நிலவுகின்ற மிகவும் இக்கட்டான சூழ்நிலையை நாடு மட்டுமன்றி ஒட்டுமொத்த மக்களும் அனுபவித்து வருகின்றனர்.

முழுநாடும் எரிபொருள் தட்டுப்பாடு, வேலையில்லாப் பிரச்சினை, பொருளாதாரப் பிரச்சினை என்று எண்ணிலடங்காத பல பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளது. ஒவ்வொருவரும் தங்களுடைய வாழ்க்கையை சிரமத்துடன் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

இப்படியான காலகட்டத்திலும் கூட ஒரு அரச தொலைக்காட்சி என்ற வகையில் இன்று வரைக்கும் பல சமூக சேவைகளை இலங்கை மக்களுக்கு வழங்கி கொண்டு வருகின்றது வசந்தம் தொலைக்காட்சி. எனவே வசந்தம் தொலைக்காட்சி மக்களின் தொலைக்காட்சி என்பதே சரியான பதமாகும்.

ரசிகர்களிடையே ஏகோபித்த வரவேற்பு காரணமாக இன்று வரைக்கும் இலங்கை மக்களுடைய வாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஒரு அலைவரிசையாக வசந்தம் பரிணமிக்கின்றது. மேலும் பல சமூக ஊடகங்களின் வரவிலும் கூட அதற்கு ஈடுகொடுத்து அதற்கேற்ப தன் சேவையை விஸ்தரித்து வியாபித்து ஒவ்வொரு ரசிகர் மனதிலும் நீங்கா இடம்பிடித்துள்ளது வசந்தம் டிவி.

எனவே மென்மேலும் இன்னும் பல தரமான நிகழ்ச்சிகளை எதிர்காலத்திலும் வழங்குவதற்கு வசந்தம் தொலைக்காட்சி தயாராகவே இருக்கின்றது. இலங்கையில் இருக்கும் பல தனியார் தொலைக்காட்சிகளோடு போட்டி போட்டுவது மட்டுமில்லாமல் தரவரிசையிலும் முன்னணியாகத் திகழ்கின்றது.

எனவே தொடர்ச்சியாக உங்களுடைய அன்பையும் ஆதரவையும் எப்பொழுதும் நல்குவீர்கள் என்ற நம்பிக்கையுடன் இந்த 13 ஆவது ஆண்டிலும் நாங்கள் கால் பதிக்கிறோம். என்றும் எங்களோடு தோள்கொடுத்து இருக்கக் கூடிய எங்களுடைய அதி பெறுமதியான தொலைக்காட்சி ரசிகர்கள் எம் விளம்பரதாரர்கள் மற்றும் எங்களுடைய நலன்விரும்பிகள் அனைவருக்கும் இந்த வேளையில் நாங்கள் நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம்.

தினேஷ் சுந்தர்...


Add new comment

Or log in with...