ஜூன் 22 மின்வெட்டு: 2 1⁄2 மணித்தியாலங்கள்

நாளை புதன்கிழமை (22) மின்வெட்டு அமுல்படுத்துவது தொடர்பான அட்டவணையை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

இவ்வாரம் பெரும்பாலான பாடசாலைகளை மூடுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதால், கல்வி அமைச்சின்னால் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கிணங்க, ஒன்லைன் கற்றல் நடவடிக்கையின் பொருட்டு, பாடசாலை இடம்பெறும் வேளைகளில் மு.ப. 7.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை மின்வெட்டை அமுல்படுத்தாதிருக்க தீர்மானித்துள்ளதாக, ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அந்த வகையில், தினமும் நண்பகல் 12.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை 2 1⁄2 மணி நேர மின்வெட்டு அமுல்ப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு வர்த்தக நகர வலயத்திற்கு காலை 6.00 மணி முதல் மு.ப. 8.30 மணி வரையில் 2 1⁄2 மணிநேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும்.

கைத்தொழில் வலயங்களுக்கு காலை 5.00 மணி முதல் மு.ப. 8.00 மணி வரையில் 3 மணித்தியாலங்கள் மின்வெட்டு அமுல்படுத்தப்படும்.

அதற்கமைய, நாட்டை 27 வலயங்களாக (A,B,C,D,E,F,G,H,I,J,K,L | P,Q,R,S,T,U,V,W | M,N,O | X,Y,Z | CC) பிரித்து ஒவ்வொரு வலயத்திலும் உள்ள பிரதேசங்களில்,

ஜூன் 22 - 23: 2 1⁄2 மணித்தியாலங்கள்

ABCDEFGHIJKL | PQRSTUVW : 
 - நண்பகல் 12.00 - பி.ப. 10.00 வரை 2 மணித்தியாலங்கள் 30 நிமிடங்கள்

MNO | XYZ : 
 - மு.ப. 5.00 - மு.ப. 8.00 வரை 3 மணித்தியாலங்கள்

CC : 
 - மு.ப. 6.00 - மு.ப. 8.30 வரை 2 மணித்தியாலங்கள்

மின் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

போதிய எரிபொருள் இன்மை காரணமாக இலங்கை மின்சார சபையினால் விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோளுக்கிணங்க இவ்வாறு திட்டமிட்ட மின்வெட்டுக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது.

<<மின்வெட்டு அட்டவணை ஜூன் 22-23.pdf>>(மின்வெட்டு பிரதேச பட்டியல் விரைவில் இணைக்கப்படும்)

PDF File: 

Add new comment

Or log in with...