வவுனியாவில் மனித உடல் எச்சம் மீட்பு

வவுனியா மாமடு காட்டுப்பிரதேசத்தில் பிரதேசத்தில் இன்று பிற்பகல் மனித உடல் எச்சமொன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

இது, மாமடு பிரதேசத்தில் வசித்து வந்த 29 வயதுடைய தனுஷ்க அமரதாச என்பவரின் சடலத்தின் எச்சமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

குறித்த நபர் கடந்த ஜூன் 01ஆம் திகதி முதல் காணாமல் போயிருந்த நிலையில் மாமடு பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டு பிரதேசவாசிகளால் தேடுதல் நடத்தப்பட்டு வந்த நிலையிலேயே குறித்த மனித உடல் எச்சம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை மனித உடல் எச்சம் காணப்பட்ட இடத்திற்கு அருகில் நஞ்சு போத்தல் ஒன்றும் காணப்பட்ட போதிலும் குறித்த மரணம் எவ்வாறு சம்பவித்தது என்பது தொடர்பில் மாமடு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

(ஓமந்தை விஷேட நிருபர்)

தற்கொலையை தடுப்போம்!
நீங்கள் தனிமையில் இருப்பதாக உணருகின்றீர்களா அழையுங்கள்

  • தேசிய மனநல உதவி இலக்கம் 1926
  • இலங்கை சுமித்ரயோ 011 2696666
  • CCC line 1333

Add new comment

Or log in with...