நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளுக்கு நாளையதினம் (17) விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இவ்வறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
நாட்டில் தற்போது நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் போக்குவரத்து சிரமங்களுக்கு மத்தியில் நாளையதினம் வெள்ளிக்கிமை (17) பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, எதிர்வரும் திங்கட்கிழமை (20) முதல் மீண்டும் பாடசாலைகள் வழமை போன்று மீண்டும் இடம்பெறுமென கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இதேவேளை, நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக, போக்குவரத்திற்கு தடங்கல் ஏற்பட்டுள்ளமை தொடர்பிலும் கவனம் செலுத்தி, அரச ஊழியர்களை விவசாயத்தில் ஈடுபடுத்தும் பொருட்டு அரச ஊழியர்களுக்கு 3 மாதங்களுக்கு வெள்ளிக்கிழமை தினத்தில் விடுமுறை வழங்க, பொது நிர்வாக அமைச்சு கொண்டு வந்த தீர்மானத்திற்கு அமைச்சரவை இவ்வாரம் அனுமதி வழங்கியிருந்தது.
கல்வி, சுகாதாரம், நீர், மின்சாரம் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளுக்கு இவ்விடுமுறை வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Add new comment