வேலு யோகராஜுக்கு எதிராக இ.தொ.கா. ஒழுக்காற்று விசாரணை நிறைவு!

- இ.தொ.கா. உபதலைவர் பதவியிலிருந்து இராஜினாமா
- விசாரணை முடிவுகள் திங்கட்கிழமை அறிவிக்க தீர்மானம்

நுவரெலியா பிரதேச சபையின் தலைவர் வேலு யோகராஜுக்கு எதிரான ஒழுக்காற்று விசாரணை இன்று (15) இடம்பெற்றதுடன் இதில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் எதிர்வரும் திங்கட்கிழமை அவருக்கு உத்தியோகபூர்வ கடிதம் மூலமாக அறிவிக்கப்படவுள்ளதாக, அக்கட்சி விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவித்துள்ளது.

இதேவேளை, விசாரணைகளையடுத்து வேலு யோகராஜ் தமது இ.தொ.கா. உபதலைவர் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

வேலு யோகராஜாக்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஒழுக்காற்று நடவடிக்கைக்குழு அதன் தலைமையகமான சௌமிய பவனில் இன்று (15) கூடியது.

நுவரெலியா பிரதேச சபையின் அதிகாரத்திற்கு உட்பட்ட கந்தபளை நகரில் நுவரெலியா பிரதேச சபைக்கு அரசாங்கம் வழங்கிய காணி தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், இது தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் இன்று முழுமையாக ஆராயப்பட்டு, வேலு யோகராஜாவிடம் விசாரணை நடத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து எதிர்வரும் திங்கட் கிழமை இவ்விசாரணையின் முடிவுகள் வேலு யோகராஜுக்கு உத்தியோகபூர்வமாக கடிதம் மூலம் அறிவிக்கப்படவுள்ளது.


Add new comment

Or log in with...