இராணுவத் தளபதி விக்கும் லியனகே பொலிஸ் மா அதிபரை சந்திப்பு

இலங்கையின் 24ஆவது இராணுவத் தளபதியாக அண்மையில் கடமைகளைப் பொறுப்பேற்ற இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே நேற்று (10) இலங்கை பொலிஸ் தலைமையகத்தில் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவைச் சந்தித்தார். 

இராணுவத் தளபதியாக கடமைகளை ஆரம்பித்ததையடுத்து சம்பிரதாயமாக இந்த சந்திப்பு இடம்பெற்றது.

பொலிஸ் தலைமையகத்திற்கு வருகை தந்த லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகேவை பொலிஸ் தலைமையக பிரதி பொலிஸ் மா அதிபர் சமந்த டி சில்வா வரவேற்றதுடன் பொலிஸ் மரபுகளுக்கமைய கௌரவ மரியாதையுடன் அவரை வரவேற்றார்.

அதனையடுத்து, பொலிஸ் மா அதிபருக்கும் இராணுவத் தளபதிக்கும் இடையில், பொலிஸ் மா அதிபர் அலுவலகத்தில் சுமூகமான கலந்துரையாடல் இடம்பெற்றதுடன், இரு அமைப்புக்களுக்கும் இடையில் நெருங்கிய உறவுகளைப் பேண வேண்டியதன் அவசியத்தையும் பாதுகாப்பு ஏற்பாடுகளும் வலியுறுத்தப்பட்டது.


Add new comment

Or log in with...