சந்தைக்கு மீண்டும் வரவுள்ள Laugfs சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் அதிகரிப்பு

Laugfs சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

Laugfs சமையல் எரிவாயு விற்பனை முகவர்கள் இதனை தெரிவித்துள்ளனர்.

அதற்கமைய,

அதற்கமைய லாஃப்ஸ் கேஸ் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் புதிய விலைகள்

  • 12.5kg: ரூ. 4,199 இலிருந்து ரூ. 6,850 ஆக ரூ. 2,651 இனால் அதிகரிப்பு
  • 5kg: ரூ. 1,136 இலிருந்து ரூ. 2,740 ஆக ரூ. 1,604 இனால் அதிகரிப்பு

சந்தையில் பல மாதங்களாக Laugfs சமையல் எரிவாயு சிலிண்டர்கள் இல்லாத நிலையில், தற்போது அவை மீண்டும் சந்தைக்கு விநியோகிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், மீண்டும் அதன் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடந்த மார்ச் 20ஆம் திகதி Laugfs எரிவாயு நிறுவனம் மேற்கொண்ட விலை அதிகரிப்பு வருமாறு:

  • 12.5kg: ரூ. 2,840 இலிருந்து ரூ.  4,199 ஆக ரூ. 1,359 இனால் அதிகரிப்பு
  • 5kg: ரூ. 1,136 இலிருந்து ரூ. 1,136 ஆக ரூ. 1,680 இனால் அதிகரிப்பு

கடந்த ஒக்டோபர் 11ஆம் திகதியும், Laugfs கேஸ் நிறுவனம் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகளை அதிரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை கடந்த ஏப்ரல் 27ஆம் திகதி முதல் லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் பின்வருமாறு அதிகரிக்கப்பட்டன.

  • 12.5kg: ரூ. 2,675 இலிருந்து ரூ. 4,860 ஆக ரூ. 2,185 இனால் அதிகரிப்பு
  • 5kg: ரூ. 1,071 இலிருந்து ரூ. 1,945 ஆக ரூ. 874 இனால் அதிகரிப்பு
  • 2.3kg: ரூ. 910 இலிருந்து ரூ. 910 ஆக ரூ. 404 இனால் அதிகரிக்கப்பட்டிருந்தது.

Add new comment

Or log in with...