கொழும்பை அண்டிய சில பிரதேசங்களுக்கு 7 மணி நேர நீர் வெட்டு

- கொழும்பு 01, 02, 03, 04, 07, 08, 09, 10 பகுதிகளில் 9 மணி நேர குறைந்த அழுத்த விநியோகம்

இன்று (04) இரவு 9.00 மணி முதல் நாளை (05) காலை 6.00 மணி வரை 9 மணித்தியாலங்களுக்கு கொழும்பு மற்றும் கடுவல பிரதேசங்களில் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகிக்கப்படுமென தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

அதற்கமைய, கொழும்பு 01, 02, 03, 04, 07, 08, 09, 10 மற்றும் கடுவெல ஆகிய பகுதிகளுக்கு குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் செய்யப்படவுள்ளதாக சபை தெரிவித்துள்ளது.
(புறக்கோட்டை

அவசர பராமரிப்பு பணிகள் காரணமாக இந்நடவடிக்கை எடுத்துள்ளதாக, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இதேவேளை, இன்று (04) இரவு 10.00 மணி முதல் நாளை அதிகாலை 5.00 மணி வரை மேலும் சில பிரதேசங்களுக்கு 7 மணித்தியால நீர் விநியோகத் தடை மேற்கொள்ளப்படவுள்ளதாக சபை தெரிவித்துள்ளது.

கோட்டே, பிட்டகோட்டே, பெத்தகான, மிரிஹான, மாதிவெல, தலபத்பிட்டிய, உடஹமுல்ல, எம்புல்தெனிய, நுகேகொடை, பாகொட, விஜேராம, நுகேகொட சந்தி முதல் நாவல திறந்த பல்கலைக்கழகம் வரையான வீதிகள் ஆகிய பகுதிகளுக்கு இவ்வாறு நீர் விநியோக இடைநிறுத்தப்படுவதாக சபை தெரிவித்துள்ளது.

கொழும்பு 01 - 15 பெயர்கள் (Colombo 01 - 15 Names)
கொழும்பு 1 - கோட்டை
கொழும்பு 2 - கொம்பனித்தெரு, யூனியன் பிளேஸ்
கொழும்பு 3 - கொள்ளுப்பிட்டி
கொழும்பு 4 - பம்பலப்பிட்டி
கொழும்பு 5 - ஹெவ்லாக் டவுன், கிருலப்பனை, கிருலப்பனை வடக்கு, நாரஹேன்பிட்டி
கொழும்பு 6 -  வெள்ளவத்தை, பாமன்கடை
கொழும்பு 7 - கறுவாத்தோட்டம்
கொழும்பு 8 - பொரளை
கொழும்பு 9 - தெமட்டகொட
கொழும்பு 10 - மருதானை, பஞ்சிகாவத்தை
கொழும்பு 11 - புறக்கோட்டை
கொழும்பு 12 - புதுக்கடை, வாழைத்தோட்டம்
கொழும்பு 13 - கொட்டாஞ்சேனை, புளூமெண்டல்
கொழும்பு 14 - கிராண்ட்பாஸ்
கொழும்பு 15 - மோதறை/முகத்துவாரம், மட்டக்குளி, மாதம்பிட்டிய


Add new comment

Or log in with...