26 அமைச்சுகளின் பொறுப்புகளும், விடயதானங்களும்; அதி விசேட வர்த்தமானி

அண்மையில் நியமிக்கப்பட்ட அமைச்சுகளும் அதன் கீழுள்ள விடயதானங்கள் மற்றும் பொறுப்புகள் அடங்கிய அதி விசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவினால் குறித்த அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

அதற்கமைய, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கீழ் உள்ள பாதுகாப்பு அமைச்சின் கீழ் தொலைத்தொடர்பு அமைச்சு வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

அது தவிர, இலங்கை மத்திய வங்கி, இலங்கை முதலீட்டுச் சபை (BOI), ஸ்ரீ லங்கா டெலிகொம் (SLT) கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு ஆகியவையும் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  1. பாதுகாப்பு
  2. நிதி, பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் தேசிய கொள்கைகள்
  3. துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள்
  4. வெளி விவகாரம்
  5. பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி
  6. மீன்பிடி
  7. கல்வி
  8. போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள்
  9. வெகுசன ஊடகம்
  10. சுகாதாரம்
  11. நீர் வழங்கல்
  12. விவசாயம்
  13. வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு
  14. நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு சீர்திருத்தம்
  15. சுற்றுலா மற்றும் காணி
  16. பெருந்தோட்டம்
  17. தொழில்
  18. நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு
  19. புத்தசாசனம், மதம் மற்றும் கலாசாரம்
  20. மின் சக்தி மற்றும் வலுசக்தி
  21. சுற்றாடல்
  22. விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரம்
  23. நீர்ப்பாசனம்
  24. தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு
  25. பொதுமக்கள் பாதுகாப்பு
  26. வர்த்தகம், வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு
PDF File: 

Add new comment

Or log in with...