சேதத்தை மதிப்பிடும்போது, எம்.பிக்கள் ஏற்கனவே வெளியிட்ட சொத்து விபரத்தை கவனத்தில் எடுக்கவும்

அண்மையில் இடம்பெற்ற கலவரங்களின் போது, சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்ட அரசியல்வாதிகளின் சொத்துகளுக்கு ஏற்பட்ட சேதத்தை மதிப்பிடும் போது, அவர்கள் முன்னர் வழங்கிய சொத்து விபர மதிப்பீட்ட்டு அறிக்கைகளை கவனத்தில் கொள்ள வேண்மென, மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.

வெலிகமவில் நேற்று (28) இடம்பெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய அவர்,

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்குத் தீர்வு வழங்காத கோபத்தில் பொதுமக்கள் பலர் அரசியல்வாதிகளின் வீடுகளை எரித்த பின்னரும், மக்களின் அவல நிலை தொடர்பில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக, இரவோடு இரவாக அவர்களை ஹோட்டல்களை தங்கவைக்கவும், அவர்களுக்கு புதிய வீடுகளை வழங்குவதுமென, அவரகளுடைய கோரிக்கைகளையே நிறைவேற்றி வருகின்றனர்.

எனவே, சொத்துகள் மற்றும் வர்த்தக நிலையங்கள் சேதப்படுத்தப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்களது சேத அறிக்கைகளை கையளித்தால், அவர்கள் அந்த சொத்துகளை முன்னதாகவே பாராளுமன்ற சொத்து விபர அறிக்கையில் தெரிவித்திருப்பதன் அடிப்படையில் அது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டுமென அவர் சுட்டிக்காட்டினார்.


Add new comment

Or log in with...