கச்சா எண்ணெய் இன்று வருகிறது; 2 மாதங்களின் பின் சபுகஸ்கந்த திறப்பு

- 6 நாட்களில் எரிபொருள் உற்பத்தி
- நாட்டில் கையிருப்பில் உள்ள எரிபொட்களின் அளவுகள் வெளியீடு

சபுகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலைய பணிகள் இன்று மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக, மின்சக்தி , வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இன்று கச்சா எண்ணெய் இறக்கப்படுவதை தொடர்ந்து, மார்ச் 20ஆம் திகதிக்கு பின்னர் முதல் முறையாக சபுகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையம் தனது செயற்பாடுகளை ஆரம்பிக்கவுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தனது ட்விட்டர் கணக்கில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

 

 

அதற்கமைய, சுத்திகரிப்பு நிலையம் 6 நாட்களில் எரிபொருட்களை உற்பத்தி செய்ய ஆரம்பிக்குமென, அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பெற்றோல் ஏற்றிய கப்பலில் இருந்து தற்போது பெற்றோல் இறக்கப்பட்டு வருவதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, இன்று (27) மு.ப. 8.30 மணியளவில் CEYPETCO விடம் கையிருப்பில் உள்ள எரிபொருட்களின் அளவுகளையும் அவர் வெளியிட்டுள்ளார்.

 

 

இன்றையதினம் எரிபொருள் கையிருப்பு (மெ.தொன்)

  • டீசல் - 20,598
  • சுப்பர் டீசல் - 1,778
  • பெற்றோல் 92 - 42,750
  • பெற்றோல் 95 - 6,579
  • JET A1 - 3,104

நேற்றையதினம் (26) எரிபொருள் கையிருப்பு  (மெ.தொன்)

  • டீசல் - 23,022
  • சுப்பர் டீசல் - 2,588
  • பெற்றோல் 92 - 39,968
  • பெற்றோல் 95 - 7,112
  • JET A1 - 3,578

Add new comment

Or log in with...