4ஆவது டோஸ் கொவிட் தடுப்பூசியை செலுத்திக் கொள்ளுங்கள்!

- தேசிய தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவு அறிவுறுத்தல்

கொரோனா வைரஸ் தடுப்பூசியின் 2ஆவது பூஸ்டரான 4ஆவது தடுப்பூசி டோஸை செலுத்திக் கொள்ளுமாறு சுகாதார அமைச்சின், தேசிய தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

அந்த வகையில், 20 வயதுக்கு மேற்பட்ட, 1ஆவது பூஸ்டர் தடுப்பூசியை செலுத்தி 3 மாதங்கள் பூர்த்தி செய்துள்ள அனைவரும் 2ஆவது பூஸ்டர் தடுப்பூசியை பெற தகுதியுடையவர்கள் என, கொழும்பு மாநகர சபையின் (CMC) பிராந்திய தொற்றுநோயியல் நிபுணர் டொக்டர் தினூ குருகே தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் 20 வயதுக்கு மேற்பட்ட வைத்திய சிக்கல்களைக் கொண்ட  அனைத்து குடிமக்களுக்கும் இந்த தடுப்பூசி டோஸ் உச்ச மட்டத்தில் பரிந்துரைக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

கொவிட்-19 2ஆவது டோஸ் பூஸ்டர் தடுப்பூசியை உங்களுக்கு அருகில் உள்ள தடுப்பூசி மையங்கள், வைத்தியசாலை அல்லது பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி (MOH) அலுவலகத்தின் மூலம் பெற்றுக்கொள்ள முடியுமென வைத்தியர் தினூ குருகே மேலும் தெரிவித்தார்.

4ஆவது டோஸ் தடுப்பூசியாக Pfizer கொவிட்-19 தடுப்பூசி செலுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

PDF File: 

Add new comment

Or log in with...