வெள்ளம் காரணமாக O/L பரீட்சைக்கு ஏற்பட்ட தடங்கலை நீக்கிய இராணுவம்

தற்போது நாடு முழுவதும் க.பொ.த (சா/த) பரீட்சை நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் அண்மையில் பெய்த கடும் மழையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக, புத்தளம் புனித அன்ட்ரூஸ் மத்திய கல்லூரி பரீட்சை நிலையத்தில் க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு ஏற்பட்ட அசௌகரியங்களை போக்க, இலங்கை இராணுவம் நடவடிக்கை எடுத்திருந்தது.

அந்த வகையில், இன்று (24) புத்தளம் புனித அன்ட்ரூஸ் மத்திய கல்லூரியில் இருந்த பரீட்சை நிலையத்தை புதிய இடத்திற்கு மாற்ற இராணுவப் படையினர் உதவிகளை வழங்கியிருந்தனர்.

புத்தளம் புனித அன்ட்ரூஸ் மத்திய கல்லூரிக்கு விரைந்த 143 ஆவது படைப் பிரிவின் படையினர் இந்த நடவடிக்கைக்கு தமது ஆதரவை வழங்கியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...