பொலிஸ்மா அதிபர் விக்ரமசிங்கவிடம் சி.ஐ.டி 5மணி நேரம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளது. வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் நேற்று முன்தினம் முன்னிலையாகியிருந்தார்.
சுமார் 5மணி நேரம் வாக்குமூலம் வழங்கியதை அடுத்து அவர் வௌியோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 9 ஆம் திகதி காலிமுகத்திடல் மற்றும் கொள்ளுப்பிட்டிய பகுதிகளில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு அமைவாக வாக்குமூலம் ஒன்றை பெற்றுக் கொடுப்பதற்காக அவர்கள் இவ்வாறு முன்னிலையாகியிருந்தார்.இது தவிர அலரி மாளிகையில் 9 ஆம் திகதி கூடிய ஆளும் தரப்பு எம்.பிக்கள் உட்பட பலரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதோடு இரு எம்.பிக்கள் உட்பட பலர் கைதாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. (பா)
Add new comment