கொழும்பின் சில பகுதிகளில் 10 மணி நேர நீர் வெட்டு

கொழும்பின் சில பகுதிகளில் இன்று (21) இரவு 10.00 மணி முதல் நாளை (22) முற்பகல் 8.00 மணி வரை 10 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

அத்தியாவசிய திருத்தப் பணிகள் காரணமாக இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவித்துள்ளது.

அதன்படி, கொழும்பு 12 (புதுக்கடை, வாழைத்தோட்டம்), கொழும்பு 13 (கொட்டாஞ்சேனை, கொச்சிக்கடை), கொழும்பு 14 (கிராண்ட்பாஸ்), கொழும்பு 15 ((மட்டக்குளி, மோதறை/ முகத்துவாரம்) ஆகிய பிரதேசங்களில் இவ்வாறு நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த காலப் பகுதியில் கொழும்பு 01 (கோட்டை), கொழும்பு 11 (புறக்கோட்டை) ஆகிய பிரதேசங்களில் குறைந்த அழுத்த நீர் விநியோகிக்கப்படவுள்ளதாக சபை சுட்டிக்காட்டியுள்ளது.

இது தொடர்பில் பாவனையாளர்கள் எதிர்நோக்கும் சிரமத்திற்கு வருந்துவதாக குறிப்பிட்டுள்ள தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை, குறித்த காலப்பகுதியில் தங்களுக்கு அவசியமான நீரை சேமித்து வைத்து பயன்படுத்துமாறு அறிவித்துள்ளது.


Add new comment

Or log in with...