கோதுமை மா விலை ரூ. 40 இனால் அதிகரிப்பு

- பாண்விலை ரூ. 30 இனாலும், பேக்கரி உற்பத்திகள் ரூ. 10 இனாலும் அதிகரிப்பு

பிறிமா நிறுவனம் கோதுமை மாவின் விலையை கிலோகிராமிற்கு ரூ. 40 இனால் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி, ஒரு கிலோ கோதுமை மாவின் விலை ரூ. 243.50 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு விலை அதிகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து 50 கிலோகிராம் கோதுமை மா மூட்டை கொள்வனவு செய்வதற்கு பத்தாயிரம் ரூபாவிற்கு மேல் செலவாகும் என பேக்கரி உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதன் காரணமாக பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலைகள் மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக, அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய இன்று நள்ளிரவு முதல் 450g பாணிண் விலை ரூ. 30 இனாலும் ஏனைய பேக்கரி உற்பத்திகளின் விலைகள் ரூ. 10 இனாலும் அதிகரிக்கப்படுவதாக, பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

அதற்கமைய, வெவ்வேறு நிறைகளைக் கொண்ட பாண்களின் புதிய விலைகள் 150 ரூபா முதல் 170 ரூபாவிற்கு இடையில் அமையுமென தெரிவிக்கப்படுகின்றது.


Add new comment

Or log in with...