அத்தியாவசிய சேவையில் உள்ளவர்கள் தவிர்ந்த ஊழியர்கள் நாளை கடமைக்கு வர வேண்டியதில்லை

- ஏன் எரிவாயு வழங்கவில்லை; லிட்ரோ தலைவரிடம் கேள்வி

அத்தியாவசிய சேவையில் ஈடுபடுவோர் தவிர்ந்த ஏனைய அரச ஊழியர்கள் நாளையதினம் (20) சேவைக்கு சமூகமளிக்க வேண்டாமென பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்றைய (19) பாராளுமன்று அமர்வின் போது தெரிவித்தார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பொதுப் போக்குவரத்திற்கு செலவாகும் எரிபொருளை சேமிப்பதற்காக இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நேற்றையதினம் லொறிகள் ஊடாக கப்பலிலிருந்து எரிவாயு இறக்கப்படும் என லிட்ரோ கேஸ் நிறுவனம் உறுதியளித்த போதிலும் அது நேற்று இரவு 8.00 மணி வரை இடம்பெறவில்லையென சுட்டிக்காட்டிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அது தொடர்பில் உடனடியாக விளக்கமளிக்குமாறு அந்நிறுவனத்தின் தலைவருக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார்.

அத்துடன் லிட்ரோ அதிகாரிகளை அழைக்குமாறு தாம் COPE குழுவிற்கும் தெரிவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


Add new comment

Or log in with...