மக்டொனால்ட்ஸ் வெளியேற்றம்

ரஷ்யாவிலிருந்து வெளியேறவுள்ளதாக விரைவு உணவு நிறுவனமான மக்டொனால்ட்ஸ் கூறியுள்ளது.

1990ஆம் ஆண்டில் ரஷ்யாவில் வர்த்தகத்தை ஆரம்பித்த அந்த நிறுவனம், சுமார் 30 ஆண்டுகளுக்குப் பின் இந்த முடிவை எடுத்துள்ளது. அது கடினமான முடிவாக இருந்தாலும் அவசியமான ஒன்று என மக்டொனால்ட்ஸ் கூறியது.

உக்ரைனில் ஏற்பட்டுள்ள மனிதாபிமான நெருக்கடியாலும், நிலையற்ற வர்த்தகச் சூழலாலும், ரஷ்யாவில் தொடர்ந்து செயல்படுவது சிரமமாக உள்ளதாக நிறுவனம் கூறியது.

நாட்டிலுள்ள அனைத்து மக்டொனால்ட்ஸ் உணவகங்களையும் உள்நாட்டு வர்த்தகரிடம் விற்க எண்ணுவதாக அது குறிப்பிட்டது. அந்த நிறுவனம் ஏற்கனவே நாட்டிலுள்ள 850 உணவகங்களையும் மார்ச் மாதத்தில் மூடியது.

உக்ரைன் மீதான ரஷ்யப் படையெடுப்பு ஆரம்பித்ததில் இருந்து எச்அன்ட்எம், ஸ்டார்பக்ஸ் உள்ளிட்ட பல பெரிய நிறுவனங்கள் ரஷ்யாவை விட்டு வெளியேறியுள்ளன.


Add new comment

Or log in with...