Wednesday, May 18, 2022 - 4:48pm
போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் CID யினால் கைது செய்யப்பட்ட SLPP எம்.பிக்களான சனத் நிஷாந்த மற்றும் மிலான் ஜயதிலக ஆகியோருக்கு மே 25 வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த இருவரும் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து இவ்வாறு விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது.
மே 09 இல் கொள்ளுப்பிட்டி மற்றும் காலி முகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது மேற்கொண்ட தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில், SLPP எம்.பி.க்களான சனத் நிஷாந்த மற்றும் மிலான் ஜயதிலக ஆகியோர் நேற்று (17) CID யினால் கைது செய்யப்பட்டிருந்தன் என்பது குறிப்பிடத்தக்கது.
Add new comment