உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: காத்தான்குடியில் கைதான 55 பேருக்கு விளக்கமறியல்

மே. 30ஆம் திகதி வரை நீடித்து உத்தரவு 

உயிர்த்த ஞாயிறு  தாக்குதல் தொடர்பாக காத்தான்குடி பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட பயங்கரவாதி ஸஹ்ரானின் பயிற்சி முகாமில் பயற்சிபெற்ற மற்றும் அவருடன் தொடர்பை பேணிவந்த 55பேரின் விளக்கமறியல் மே 30வரை நீடிக்கப்பட்டுள்ளது.

 மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற பதில் நீதிவான் ரி.தியதகேஸ்வரன் நேற்று செவ்வாய்க்கிழமை (17) இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற பதில் நீதிவான் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டது.எனினும்,பல்வேறு சிறைச்சாலைக ளிலுள்ளவர்கள் நாட்டின் சூழ்நிலை காரணமாக அழைத்து வரப்படவில்லை. 

இந்நிலையில், மட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள சிலர் பலத்த பாதுகாப்புடன் அழைத்துவரப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.இதன்போதே இவர்களை எதிர்வரும் (30) ஆம் திகதிவரை விளக்கமறியவில் வைக்குமாறு பதில் நீதிவான் உத்தரவிட்டார்.


Add new comment

Or log in with...