மஹிந்த, நாமல் நேற்று சபைக்கு வரவில்லை

பிரதி சபாநாயகர் தெரிவில் பங்கேற்கவில்லை

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ ஆகியோர் நேற்று செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்துக்கு சமுகமளிக்கவில்லை.

பிரதி சபாநாயகர் தெரிவுக்கான இரகசிய வாக்கெடுப்பு நேற்று நடைபெற்ற போதும், அவர்கள் சமுகமளிக்கவில்லையென அறிவிக்கப்பட்டது. கடந்த 09 ஆம் திகதி இடம்பெற்ற பதற்ற நிலையையடுத்து மஹிந்த ராஜபக்ஷ திருகோணமலை கடற்படை தளத்தில் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

(லோரன்ஸ் செல்வநாயகம், ஷம்ஸ் பாஹிம்)


Add new comment

Or log in with...