"எரிபொருள் பற்றாக்குறை" தனியார் பஸ் சேவைகள் மட்டுப்படுத்தப்படும்

தனியார் பஸ் உரிமையாளர்கள் அறிவிப்பு

டீசல் இன்மையால் நாடு முழுவதும் பஸ் சேவைகளை 10 சதவீதமாக குறைக்க நேரிட்டுள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து டீசல் கிடைக்காவிடத்து நாளை முதல் தனியார் பஸ்கள் சேவையில் இருந்து விலக நேரிடும் என அந்தச் சங்கத்தின் தலைவர்

கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.

எனினும் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ள காலப்பகுதியில் சகல பஸ்களும் வழமை போன்று சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

அத்துடன் எதிர்வரும் சில நாட்களுக்கு இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்களுக்கு மாத்திரமே டீசல் கையிருப்பில் உள்ளதாக அதன் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


Add new comment

Or log in with...