கொழும்பு 11, கதிரேசன் வீதியில் அமைந்துள்ள கதிர்வேலாயுத சுவாமி திருக்கோயிலின் மகோற்சவம் அண்மையில் ஆரம்பமாகியது. இவ்வாலயத்தில் கடந்த 12ஆம் திகதி மாலை கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, கிராம சாந்தி என்பன நடத்தப்பட்டு கடந்த 13ஆம் திகதி நடைபெற்ற கொடியேற்றத்துடன் இம்மகோற்சவம் ஆரம்பமானது. கடந்த 12ஆம் திகதியிலிருந்து தொடர்ந்து 10 நாட்களுக்கு தினமும் காலையும் மாலையும் விஷேட அபிஷேகம், தீபாராதனை, வசந்த மண்டப பூஜை என்பன நடத்தப்பட்டு சுவாமி உள் வீதி உலா வருதலும் இடம்பெற்று வருகின்றன. இவ்வாலயத்தில் நேற்று திருவிளக்கு பூசை நடைபெற்றது.
எதிர்வரும் 17ஆம் திகதி மாலை 5 மணிக்கு மாவிளக்கு பூசையும் 18ஆம் திகதி காலை 8.30 மணிக்கு கைலாச வாகன ஊர்வலமும் மாலை 4 மணிக்கு கற்பூரச்சட்டி ஊர்வலமும் 19ஆம் திகதி காலை 8 மணிக்கு மாம்பழத் திருவிழாவும் அன்று மாலை 3 மணிக்கு வேட்டைத் திருவிழாவும் 20ஆம் திகதி 6 மணிக்கு சப்பறத் திருவிழா வௌிவீதி உலாவும் நடைபெறும்.
இவ்வாலயத்தின் தேர்த்திருவிழா எதிர்வரும் 21ஆம் திகதி சனிக்கிழமை காலை 7 மணிக்கு நடைபெறவுள்ளது. அன்று மாலை 5 மணிக்கு தேரடி உற்சவம் நடைபெறவுள்ளது. இவ்வாலயத்தில் 22ஆம் திகதி 9 மணிக்கு தீர்த்தோற்சவமும் மாலை 5 மணிக்கு திருக்கல்யாணம் பூந்தண்டிகையும் 24ஆம் திகதி மாலை 5 மணிக்கு பூங்காவனமும் 27ஆம் திகதி மாலை 5 மணிக்கு வைரவர் பூசையும் நடைபெறும்.
Add new comment