அமைதியான போராட்டக்காரர்கள் மீது நேற்று நடத்தப்பட்ட தாக்குதலை கண்டிப்பதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சுங் தெரிவித்துள்ளார். தாக்குதலுக்கு அவர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஜூலி சுங் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் கணக்கில் இந்த கருத்தை தெரிவித்துள்ளார். "அமைதியான போராட்டக்காரர்கள் மீதான தாக்குதலை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம், மேலும் இந்த சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடத்தி வன்முறையில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்து தண்டிக்குமாறு அரசாங்கத்தை கேட்டுக்கொள்கிறோம்.
அனைத்து இலங்கையர்களும் அமைதியாகவும் நிதானமாகவும் இருக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
லோரன்ஸ் செல்வநாயகம்
Add new comment