நடிகை அனுஷா சொனாலி காலமானார்

பிரபல சிங்கள நடிகை அனுஷா சொனாலி காலமானார்.

இறக்கும் போது அவருக்கு 47 வயதாகும்.

கொழும்பு தெற்கு களுபோவில போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

திடீரென ஏற்பட்ட மூச்சுத் திணறல் காரணமாக அவர் மரணமடைந்துள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அவர் சில காலமாக நோய்வாய்ப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

1995 ஆம் ஆண்டு லேக் ஹவுஸ் நிறுவனத்தால் வழங்கப்படும் சரசவி திரைப்பட விழாவில் சிறந்த வளர்ந்து வரும் நடிகைக்கான விருதை அவர் பெற்றிருந்தார்.

அனுஷா சொனாலி, 'விசிதெல' உள்ளிட்ட பல பிரபலமான சிங்கள திரைப்படங்களில் நடித்து உள்ளூர் சினிமாத் துறைக்கு தனது பங்களிப்பை வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...