Monday, April 25, 2022 - 11:28am
- மேலதிக நடவடிக்கை தொடர்பில் அறிக்கை ஆழமாக ஆராயப்படும்
அரசியலமைப்பு மறுசீரமைப்பு தொடர்பான குழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக,ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத் தெரிவித்துள்ளார்.
அறிக்கையின் உள்ளடக்கங்களை அரசாங்கம் ஆழமாக பரிசீலித்து மேலதிக நடவடிக்கைகளை தீர்மானிக்கும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
குறித்த குழுவின் பணி தொடர்பில் ஜனாதிபதி தனது நன்றிகளைத் தெரிவிப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள இக்குழுவில் ஜனாதிபதி சட்டத்தரணிகள் உள்ளிட்ட ஒன்பது உறுப்பினர்கள் உள்ளடங்குகின்றனர்.
குறித்த குழுவின் உறுப்பினர்கள்
- ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா - தலைவர்
- ஜனாதிபதி சட்டத்தரணி காமினி மாரப்பன
- ஜனாதிபதி சட்டத்தரணி மனோஹர டி சில்வா
- ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ ஜயவர்தன
- பேராசிரியர் நசீமா கமுர்தீன்
- கலாநிதி சர்வேஸ்வரன்
- ஜனாதிபதி சட்டத்தரணி சமந்த ரத்வத்த
- பேராசிரியர் வசந்த செனவிரத்ன
- பேராசிரியர் ஜி.எச். பீரிஸ்
Add new comment