Tuesday, April 19, 2022 - 6:32pm
சாவகச்சேரி, நூணாவில் பகுதியில் வீதியால் துவிச்சக்கரவண்டியில் சென்ற ஒருவர் திடீரென வீதியில் மயங்கி வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் நேற்று (18) பிற்பகல் நூணாவில் எரிபொருள் நிரப்பு நிலையத்தை அண்மித்த பகுதியில் இடம்பெற்றுள்ளது.
சாவகச்சேரி டச் வீதி பகுதியைச் சேர்ந்த 62 வயதான ஒருவரே இவ்வாறு வீதியில் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவது சடலம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் பிரேத பரிசோதனை மற்றும் மரண விசாரணைகளுக்காக வைக்கப்பட்டுள்ளது.
சாவகச்சேரி விசேட நிருபர்
Add new comment