லொறி - மோட்டார் சைக்கிள் விபத்து; சிறுவன் பலி

லொறி - மோட்டார் சைக்கிள் விபத்து; சிறுவன் பலி-Jaffna Accident-a Boy Killed

யாழ். நகர் பகுதியில் லொறி ஒன்று மோட்டார் சைக்கிளில் மோதியதில் சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளான்.

யாழ்ப்பாணம் சத்திர சந்தி பகுதியில் இன்றையதினம் (11) திங்கட்கிழமை காலை இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணம் தாவடி பகுதியை சேர்ந்த அஜித்தன் அபிநயன் எனும் 10 வயது சிறுவனே இவ்விபத்தில் உயிரிழந்துள்ளான். 

லொறி - மோட்டார் சைக்கிள் விபத்து; சிறுவன் பலி-Jaffna Accident-a Boy Killed

தாயும் மகனும் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த வேளை பின்னால் சென்ற பாரவூர்தி மோதியதில், மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து பயணித்த சிறுவன் , வீதியில் வீழ்ந்து பாரவூர்தியின் சக்கரத்திற்குள் சிக்கி ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளான்.

லொறி - மோட்டார் சைக்கிள் விபத்து; சிறுவன் பலி-Jaffna Accident-a Boy Killed

சம்பவம் தொடர்பில் அறிந்து யாழ்ப்பாண பொலிஸார் , சம்பவ இடத்திற்கு விரைந்து , பாரவூர்தி சாரதியை கைது செய்ததுடன் , பாரவூர்தியையும் பொலிஸ் நிலையத்திற்கு எடுத்து சென்று மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

லொறி - மோட்டார் சைக்கிள் விபத்து; சிறுவன் பலி-Jaffna Accident-a Boy Killed

யாழ். விசேட நிருபர்

Add new comment

Or log in with...