புதுவருடம்: ஏப்ரல் 13, 14 மற்றும் 15 இலும் மின்வெட்டுக்கு வாய்ப்பில்லை (UPDATE)

எதிர்வரும் ஏப்ரல் 13, 14, 15ஆம் திகதியிலும் நாட்டில் மின்வெட்டு அமுல்படுத்தப்படமாட்டாது என, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தற்போது தெரிவித்துள்ளார்.

(UPDATE)

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _

எதிர்வரும் ஏப்ரல் 13, 14 ஆகிய புது வருட விடுமுறை தினங்களில் நாட்டில் மின்வெட்டு அமுல்படுத்தப்பட வாய்ப்பு இல்லை என, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மின்சார உற்பத்திக்கு அவசியமான போதிய எரிபொருள் காணப்படுவதாலும், நீண்ட விடுமுறையில் மின்சாரத்திற்கான கேள்வி குறைவு என்பதாலும், ஏப்ரல் 13, 14ஆகி இரு தினங்களில் மின்வெட்டு அமுல்படுத்த வாய்ப்பு இல்லை என, ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்தார்.

9.48am


Add new comment

Or log in with...