Friday, April 8, 2022 - 6:00am
50 ரூபாவால் அதிகரிக்க நடவடிக்கை!
ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலையை மேலும் 50 ரூபாவால் அதிகரிப்பதற்கு கோதுமை மா நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றன.
இந்த விடயம் தொடர்பாக தெரிவித்துள்ள அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே ஜயவர்தன, தற்போது ஒரு கிலோகிராம் கோதுமை மா 180 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதன் விலை மேலும் 50 ரூபாவினால் அதிகரிக்கப்படுமாயின் தமது தொழிற்துறையினர் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்க வேண்டியேற்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்
Add new comment