இன்று மாலை 6.00 மணி முதல் 36 மணித்தியாலங்களுக்கு ஊரடங்கு!

இன்று மாலை 6.00 மணி முதல் 36 மணித்தியாலங்களுக்கு ஊரடங்கு!-CURFEW-April 02 6pm to April 4 6am

இன்று (02) மாலை 6.00 மணி முதல் நாளை மறுதினம் (04) காலை 6.00 மணி வரை நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களம் இதனை அறிவித்துள்ளது.

நேற்று முன்தினம் (31) நுகேகொடை ஜனாதிபதி இல்லத்திற்கு முன்பாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் மற்றும் அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற அமைதியின்மையை அடுத்து, கடந்த இரு நாட்களாக இரவில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்தது.

இதேவேளை, நாளையதினம் (03) நாடு முழுவதும் ஆர்ப்பாட்ட பேரணிகள் ஒழுங்கு செய்யப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இது தவிர ஜனாதிபதியினால் இலங்கையில் அவசரகால நிலை பிரகடனம் செய்யப்பட்டு அதி விசேட வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

PDF File: 

Add new comment

Or log in with...