இலங்கை தொடர்பான சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) அறிக்கை வெளியீடு

சர்வதேச நாணய நிதியம் இலங்கை தொடர்பான அதன் அறிக்கையை (IMF Article IV) வெளியிட்டுள்ளது.

நேற்றைய திகதியில் (25) இலங்கைக்கான நிறைவேற்றுப் பணிப்பாளரினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், நாட்டில் பண வீக்கம் அதிகரித்துச் செல்வதையும், பொருட்களுக்கான உள்நாட்டுத் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையின் சாராம்சம் வருமாறு,

COVID-19 தொற்றானது பொருளாதாரத்தை கடுமையாக பாதித்தது, இதனால் சுற்றுலா வருமான இழப்பு ஏற்பட்டது. நாட்டை முடக்கி ((Lockdown) வைக்க வேண்டிய தேவையும் ஏற்பட்டது.  தொற்றுநோய்க்கு முந்தைய வரிக் குறைப்புக்கள் மற்றும் COVID-19 இன் தாக்கம் போன்றவை 2020 மற்றும் 2021 இல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவீதத்திற்கும் அதிகமான நிதிப் பற்றாக்குறைக்கு வழிவகுத்தது.

அத்துடன் 2021 இல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 119 சதவீதமாக பொதுக் கடனில் விரைவான அதிகரிப்பு ஏற்பட்டது. சர்வதேச மூலதனச் சந்தைகளுக்கான அணுகலை இலங்கை இழந்தது.  2020 ஆம் ஆண்டில், சர்வதேச கையிருப்புக்கள் மிகக் குறைந்த மட்டங்களுக்கு வீழ்ச்சியடைவதற்கு வாய்ப்பை ஏற்படுத்தியதோடு, இலங்கை மத்திய வங்கியால் (CBSL) அரசாங்கத்திற்கு பாரிய அளவிலான நேரடிக் கடன்கள் வழங்கப்படுகின்றன.  வெளிநாட்டுக் கடன் திருப்பிச் செலுத்துதல் மற்றும் விரிவடைந்து வரும் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை அந்நியச் செலாவணி (FX) பற்றாக்குறைக்கு வழிவகுத்தது. அதே நேரத்தில் உத்தியோகபூர்வ நாணயமாற்று விகிதம் ஏப்ரல் 2021 முதல் நடைமுறையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பணவீக்கம் அதிகரித்து வருவதுடன், டிசம்பர் 2021 இல், அது இரு இலக்கத்தை அடைந்துள்ளது. அத்துடன் இறக்குமதியில் பணவீக்கம் பிரதிபலிப்பதடன்,  விநியோகத் தட்டுப்பாடு மற்றும் தளர்வான நாணயக் கொள்கையின் மத்தியில் பொருட்களுக்கான உள்நாட்டுத் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது.

இதனை ஈடு செய்வதற்காக மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகளாக ஒரு சில விடயங்களை சர்வதேச நாணய நிதியம் குறித்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அதற்கமைய,

பேரண்ட பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் கடன் நிலைபேறு தன்மையை மீட்டெடுக்க, மிக நெருங்கிய மற்றும் நடுத்தர காலத்தை உள்ளடக்கிய நம்பகமான மற்றும் ஒத்திசைவான மூலோபாயத்தை செயல்படுத்துவது அவசியம்.  குறிப்பிட்ட நடவடிக்கைகளுடன் கூடிய விரிவான கொள்கைகளின் தொகுப்பு பரிந்துரைக்கப்படுகின்றது:

கணிசமான வருமானத்தை பெறுவதனை அடிப்படையாகக் கொண்ட நிதி ஒருங்கிணைப்பை மேற்கொள்ளல். VAT மற்றும் வருமான வரிகளை அதிகரிப்பதன் மூலம் அவற்றை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும்.  நஷ்டமடைந்து வரும் அரச நிறுவனங்களால் ஏற்படும் நிதி அபாயங்களைக் குறைக்க, எரிசக்தி விலை நிர்ணய சீர்திருத்தங்களுடன் நிதிச் சரிசெய்தலை மேற்கொள்ள வேண்டும். இவை நிதி விதியை மறுசீரமைப்பது போன்ற நிறுவனத்தை கட்டியெழுப்பும் சீர்திருத்தங்கள், மூலோபாயத்தின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த உதவும்.

சர்வதேச நாணய நிதியத்தினால் வெளியிடப்பட்டுள்ள,  இலங்கை தொடர்பான அறிக்கை (IMF Article IV) வருமாறு...

PDF File: 

Add new comment

Or log in with...