மிகை கட்டண வரி சட்டமூலத்தை சாதாரண பெரும்பான்மை மூலம் நிறைவேற்றலாம்

- உயர் நீதிமன்றம் பாராளுமன்றத்திற்கு அறிவிப்பு

மிகை கட்டண வரி சட்டமூலத்தை சாதாரண பெரும்பான்மை மூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றலாமென, உயர் நீதிமன்றம் பாராளுமன்றத்திற்கு அறிவித்துள்ளது.

இது தொடர்பில் இன்று (22) பாராளுமன்ற அமர்வுகள் ஆரம்பமானதைத் தொடர்ந்து சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன இதனை சபைக்கு அறிவித்தார்.

அவர் வெளியிட்ட குறித்த அறிவிப்பு வருமாறு...

அரசியலமைப்பின் 121(1) ஆம் உறுப்புரையின் பிரகாரம் “மிகைக்கட்டண வரி” எனும் சட்டமூலம் தொடர்பாக உயர் நீதிமன்றத்திற்கு  ஆற்றுப்படுத்தப்பட்ட மனுக்கள் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு எனக்குக் கிடைக்கப்பெற்றுள்ளதென்பதை பாராளுமன்றத்திற்கு அறிவிக்க விரும்புகின்றேன்.

சட்டமூலத்தின் ஏற்பாடுகளை முற்றுமுழுதாகப் பரிசீலனை செய்யுமிடத்து, சட்டமூலமோ அல்லது அதன் எந்த ஏற்பாடுகளுமோ அரசியலமைப்பின் 12ஆம் உறுப்புரை அல்லது 13ஆம் உறுப்புரைகளுக்கு ஒவ்வாதனவாகவிராது என உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

இந்தச் சூழ்நிலையில் “மிகைக்கட்டண வரி” எனும் இச்சட்டமூலத்தை சாதாரண பெரும்பாண்மையொன்றின் மூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றலாம் என உயர் நீதிமன்றம் மேலும் தீர்மானித்துள்ளது.

உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு இன்றைய கூட்ட நடவடிக்கைகள் பற்றிய அதிகார அறிக்கையில் பதிப்பிட வேண்டுமென நான் கட்டளையிடுகின்றேன்.

உச்ச நீதிமன்றத்தின் வியாக்கியானம் இணைப்பு

PDF File: 

Add new comment

Or log in with...