நிமல் லான்சா இராஜாங்க அமைச்சுப் பதவியிலிருந்து இராஜினாமா

- ஜனாதிபதிக்கு கடந்த வாரம் சில விடயங்கள் தொடர்பிலும் கடிதம்

நிமல் லான்சா தனது இராஜாங்க அமைச்சுப் பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ளார்.

கிராமிய வீதிகள் மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சராக அவர் செயற்பட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவர் இன்று தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா தமது அமைச்சின் கீழ் உள்ள வீதி அபிவிருத்தி உள்ளிட்ட சில விடயங்கள் தொடர்பில், சில வாரங்களுக்கு முன்னர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கலந்துரையாடியிருந்ததாகவும் கடிதம் மூலம் தெளிவுபடுத்தியிருந்ததாகவும் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...