இன்று முதல் கோதுமை மாவின் விலை ரூ. 35 - 40 இனால் அதிகரிப்பு

இன்று முதல் கோதுமை மாவின் விலை ரூ. 35 - 40 இனால் அதிகரிப்பு

ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை 35 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக செரண்டிப் நிறுவனம் அறிவித்துள்ளது. .

இன்று (11) முதல் இவ்விலை அதிகரிப்பு அமுலுக்கு வருவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, பிறிமா நிறுவனமும் ஒரு கிலோ கோதுமை மாவுக்கான விலையை அதிகரித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் பிறிமா நிறுவனத்தின் ஒரு கிலோ கோதுமை மாவின் விலை 40 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அந்த வகையில் இவ்விலை அதிகரிப்ப்புக்கு ஏற்ப பேக்கரி உற்பத்திகளின் விலைகளும் அதிகரிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

நாணயமாற்று விகிதங்களின் அடிப்படையில் இலங்கை ரூபாவின் பெறுமதி குறைவடைந்தமை மற்றும் டொலர் விலை அதிகரிப்பு காரணமாக, இறக்குமதி செலவை ஈடு செய்ய இவ்வாறு கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Add new comment

Or log in with...